தமிழகம்

நாளை ஊரடங்கு தளர்வு இல்லை தமிழக அரசு அறிவிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


சென்னை:-

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அரசு முடிவெடுத்து அறிவிப்பு ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக் காலத்தில் பொது மக்களின் நடமாட்டத்துக்கும், கடைகளை திறக்கவும், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதேநேரத்தில் நாளை (ஏப்.20) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து மத்திய அரசால் வழிகாட்டுதல்கள் முன்னரே வெளியிடப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது:-

ALSO READ  நாளை தேசிய சுய ஊரடங்கு நீங்கள் தயாரா???

அந்த அறிவிப்பில், மத்திய அரசு கடந்த 15ம் தேதி வெளியிட்ட ஆணையில், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆதலால் இதுகுறித்து ஆலோசிக்க மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது.

ALSO READ  ZOOM App இல் உள்ள ஆபத்துக்கள் என்ன? விரிவாக விளக்கும் நிபுணர்கள்..

அந்த குழு, தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடம் நாளை தெரிவிக்க உள்ளது, இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார்.

எனவே, இது குறித்து தமிழக அரசு ஆணைகள் வெளியிடும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று :

Shobika

சென்னை – திருப்பதி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரெயில் இயக்கம்..

Shanthi

தமிழ்த்தாய் வாழ்த்து… தமிழக அரசு பிறப்பித்த கட்டாய உத்தரவு!

naveen santhakumar