உலகம்

கொரோனா வைரஸை பரப்பியதற்காக, சீனாவிடம் நஷ்ட ஈடு கோரும் ஜெர்மனி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸை பரப்பியதற்காக, சீனா 130பில்லியன் பவுண்ட் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து,ஜெர்மனியும் தற்போது சீனா மீது குற்றம் சாட்டி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் தங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்பட்ட இழப்புக்கு சீனா எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விவரப்பட்டியலையும் ஜெர்மனி வெளியிட்டுள்ளது.

சுற்றுலா, திரைப்படத்துறை, சிறு குறு தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புக்காக 130 பில்லியன் பவுண்ட் (149 பில்லியன் யூரோக்கள்) இழப்பீடாக சீனா தர வேண்டும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது. 
அந்த பட்டியலில் சுற்றுலா இழப்புக்காக 27 பில்லியன் யூரோக்களும், திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்புக்காக 7.2 பில்லியன் யூரோக்களும், விமான சேவையில் ஏற்பட்ட இழப்புக்காக 1 பில்லியன் யூரோக்களும், சிறு தொழில்களில் ஏற்பட்டுள்ள இழப்புக்காக 50 பில்லியன் யூரோக்களும், சீனா தங்களுக்கு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  எதிரிகள் சுற்றி வளைத்ததால் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் தற்கொலை! 

இதற்கு பதிலளித்துள்ள சீனா, தங்கள் நாட்டின் மீதான வெறுப்பு காரணமாக ஜெர்மனி இவ்வாறு கூறியிருப்பதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தொற்றுநோய்க்கு, ஒரு நாட்டைக் குறை கூறி இழப்பீடு கேட்பது அயல்நாட்டு வெறுப்பையும் (Xenophobia), தேசியவாதத்தையும் (Nationalism) தூண்டும் மோசமான செயல் என சீனா விமர்சித்துள்ளது.

ஜெர்மனியின் பொருளாதாரம் 4.2 சதவீதம் அளவிற்கு வீழ்ந்துள்ளதன் மூலமாக தனி நபர் ஒருவருக்கு 1784 யூரோக்கள் 1550 (பவுண்டுகள்) நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ  தடையை மீறி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கேரள பாதிரியார் கைது.....

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு போரை தடுத்து நிறுத்திய கொரோனா வைரஸ்…

naveen santhakumar

மெக்ஸிகோவில் கடுமையான நிலநடுக்கம் :

Shobika

கதிரவனுக்கு நன்றி செலுத்துவதற்காக அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாடிய சாத் விரத பூஜை :

naveen santhakumar