உலகம்

Bank Of Japan வரலாற்றில் முதல் பெண் நிர்வாக இயக்குநர் நியமனம்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:-

138 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்ட பேங்க் ஆஃப் ஜப்பான் வங்கியில் (Bank Of Japan) முதல்முறையாக ஒரு பெண் நிர்வாக இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

டோக்கிகோ ஷிமிசு ( Tokiko Shimizu (55) தான் பேங்க் ஆப் ஜப்பான் வங்கியின் நிர்வாக இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

1987-ஆம் ஆண்டில் போஜே நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கி நிதிச் சந்தைப் (Financial Markets) பிரிவிலும், அந்நிய செலாவணி நடவடிக்கைகளிலும் (Foreign Exchange Operations) பங்கு வகித்தார். 

2010 ஆம் ஆண்டு தக்காமட்சு (Takamatsu) கிளையின் மேலாளராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் பேங்க் ஆப் ஜப்பானின் முதல் பெண் மேலாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

ALSO READ  போதும்… போதும்… வாங்க பூமிய காப்பாத்துவோம் - இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

பின்னர் ஐரோப்பாவிற்கான பொது மேலாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு லண்டனில் தலைமை பிரதிநிதியாக 2016 முதல் 2018 வரை இருந்தார்.

தற்போது இவர் வாரியத்தின் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே ஒரு பெண். இதுவரை ஒரு பெண் வங்கியின் கவர்னராக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  பாராலிம்பிக் டேபிள் டென்னிசில் இந்தியாவின் பவினா வெள்ளி பதக்கம் வென்றார்

1882ஆம் ஆண்டு பேங்க் ஆஃப் ஜப்பான் தொடங்கப்பட்டது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு

Admin

சர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீரால் பரவிய கொரோனா….

naveen santhakumar

பிரான்ஸில் இந்திய அரசுக்கு சொந்தமான 20 சொத்துக்கள் முடக்கம்- காரணம் என்ன ?

naveen santhakumar