இந்தியா

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் இந்திய- வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை கேரளாவில்  தாமதமாக தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும், வழக்கமான ஜூன் 1-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில்,  இந்த ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கக்கூடும். கேரளாவில் இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக, ஜூன் மாதம் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கக்கூடும்.

ALSO READ  எளிய மாணவர்களின் கல்விக்காக அமெரிக்காவிலிருந்து நீளும் உதவி கரங்கள்... 

இந்தியப் பருவமழை மண்டலத்தில், முதல்கட்டப் பருவமழை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பெய்வதுடன், பின்பு பருவக்காற்று வங்கக் கடலில் வடக்கு மேற்காக வீசுவதுண்டு. பருவமழையின் தொடக்கம் மற்றும் முன்னேற்றம் தொடர்பான புதிய தேதிகளின்படி, தென்மேற்குப் பருவமழை அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே மே 22-ஆம் தேதி பெய்யத் தொடங்கும்  என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 102 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று…

naveen santhakumar

இந்திய வான்வெளியில் பறப்பதை தவிர்த்து மலேஷியா சென்ற இம்ரான் கான்

Admin

Azərbaycanda rəsmi say

Shobika