இந்தியா

தாயை சந்திக்க டெல்லியில் இருந்து பெங்களூருக்கு தனியாக பயணித்த 5 வயது சிறுவன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

ஊரடங்கிற்கு பின்னர் இன்று துவங்கிய உள்நாட்டு பயணிகள் விமான சேவை துவங்கியது. இந்நிலையில் டில்லியில் இருந்து 5 வயது சிறுவன் தனியாக பெங்களூரு வந்து தனது தாயை சந்தித்தான்.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை துவங்கியது. ஊரடங்கிற்கு முன்னர் டெல்லியில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்ற 5 வயது சிறுவன் விஹான் சர்மா அங்கு சிக்கி கொண்டான். பெற்றோர்கள் பெங்களூருவில் வசித்தனர். விமான சேவை இன்று துவங்கியதால், அதில் சிறப்பு பிரிவில், டில்லியில் இருந்து பெங்களூரு விமானத்தில் அந்த சிறுவன், மஞ்சள் நிற ஜாக்கெட் அதற்கு மேட்சிங்காக மஞ்சள் நிற மாஸ்க் மற்றும் நீல நிற கையுறை அணிந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியாக பயணம் செய்து, 3 மாதங்களுக்கு பிறகு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வந்து தனது தாயாரை சந்தித்தான்.

ALSO READ  தேன்களில் கலப்படம் செய்யும் முன்னனி நிறுவனங்கள்…..அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தகவல்கள்…...

இது தொடர்பாக விஹானின் தாயார் கூறுகையில்:-

எனது 5 வயது மகன் விஹான் சர்மா, டில்லியிலிருந்து தனியாக வந்துள்ளான். 3 மாதத்திற்கு பின்னர் பெங்களூரு வந்தடைந்ததாக தெரிவித்தார்.

பெங்களூரு விமான நிலையம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:-

விஹானை சொந்த ஊருக்கு வரவேற்கிறோம். அனைத்து பயணிகளும் பத்திரமாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ .ஏ .எஸ் அதிகாரி எழுதிய நூல் சோனியா காந்திக்கு பரிசளிப்பு

News Editor

இப்படியும் ஒரு Revenge-ஆ; கடித்த பாம்பை கடித்தேக் கொன்ற விவசாயி …!

naveen santhakumar

ஹோட்டலின் வித்தியாசமான அறிவிப்பு…..மாமியார்-மருமகள் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கிட்டா கட்டணம் இலவசம்:

naveen santhakumar