அரசியல் இந்தியா தமிழகம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ .ஏ .எஸ் அதிகாரி எழுதிய நூல் சோனியா காந்திக்கு பரிசளிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது தில்லி:
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக புதுடெல்லியில் தங்கி பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அரசு அதிகாரிகளையும் சந்தித்தார் .

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார் .

சோனியா காந்தியுடனான சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின் ஒரு புத்தகத்தையும் பரிசளித்தார். அந்த நூலின் பெயர் ‘ஜர்னி ஆஃப் ய சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை’ என்பதாகும்.

ALSO READ  ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. 

இந்தப் புத்தகத்தை எழுதியவர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆர். பாலகிருஷ்ணன். இந்திய ஆட்சிப் பணியில் பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை என பல்வேறு உயர் பதவிகளை வகித்து, ஓய்வுபெற்ற பிறகு ஒடிசா மாநில அரசின் ஆலோசகராக பணியாற்றி வரும் இவர், சிந்து சமவெளி பண்பாட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

3rd Day of World Congress of Poets, Odisha is Wonderland of Pluralism: Shri  R. Balakrishnan | KalingaTV

இவர் எழுதியிருக்கும் ‘ஜர்னி ஆஃப் ய சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை’ புத்தகம் சிந்து முதல் வைகை நதி வரையிலான ஒரு நாகரீகத்தின் பயணத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. இந்நூல் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை..! 

News Editor

ரூ.5,000 ஊக்கத் தொகை திட்டம் – நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின் ..!

News Editor

1xBet 1хБет скачать на Андроид Приложение 1xbet Android apk бесплатн

Shobika