இந்தியா

இந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மொகாலி:-
இந்திய ஹாக்கி விளையாட்டின் மிகச்சிறந்த வீரரும், மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான பல்பீர் சிங் சீனியர் காலமானார். அவருக்கு வயது 95. அவர் கடந்த 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பெருமைக்குரியவர்.

1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸில் இவர் தலைமையில்தான் இந்திய அணி தங்கம் வென்றது.

ஒலிம்பிக்கின் ஆடவர் ஆக்கி இறுதி போட்டியில் தனிநபராக அவர் கோல்கள் அடித்து பதிவு செய்த உலக சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

ALSO READ  சீனப் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: சிவ்ராஜ் சிங் செளஹான், ஹர்பஜன் கோரிக்கை… 

இந்நிலையில், உடல்நல குறைவால் பஞ்சாபின் மொகாலி நகரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் கடந்த 8ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார். இதனை அவரது பேரன் கபீர் உறுதி செய்துள்ளார். அவருக்கு வயது 96.  சிங்கிற்கு சுஷ்பீர் என்ற மகளும், கன்வால்பீர், பரன்பீர் மற்றும் குர்பீர் என 3 மகன்களும் உள்ளனர்.

கடந்த 1957ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி அவர் கவுரவிக்கப்பட்டார். 

ALSO READ  பள்ளியில் கெத்து காட்டிய ஆராத்யா பச்சன்!

உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவை முன்னிறுத்தியதில் பல்பீர் சிங்கிற்கு மிகப்பெரிய பங்குண்டு. இவர் “ஹாக்கி மேஸ்ட்ரோ” என்று அன்போடு அழைப்பட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவையா?

Shanthi

கட்டுபாட்டை இழந்த லாரியால் விபத்து….. 13 பேர் பலி……6 பேர் படுகாயம்…..

naveen santhakumar

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

News Editor