இந்தியா

சீனப் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: சிவ்ராஜ் சிங் செளஹான், ஹர்பஜன் கோரிக்கை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தூர்:-

சீனப் பொருள்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான் கோரிக்கை விடுத்துள்ளார். லடாக்கின் கிழக்கு பகுதியிலுள்ள கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் அண்மையில் சீன படையினருடனான கைகலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். சீன தரப்பில் 43 வரை பலியானதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்க அந்நாட்டு பொருள்களை புறக்கணிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ  பப்ஜி செயலிக்கு தடை?- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ரெவாவில் (Rewa) செய்தியாளர்களிடம் பேசிய சிவ்ராஜ் சிங் செளஹான், எல்லையில் சீனப்படையினருக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும், இதேபோல் சீன பொருளாதார வலிமையை உடைத்தெறிய, அந்நாட்டு பொருள்களை புறக்கணித்து இந்திய பொருள்களை மக்கள் பயன்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

இதேபோல, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ALSO READ  புதிய சிக்கல் மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமா..

முன்னதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders (CAIT)) 450 சீன பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சானிடைசர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- உ.பி. தர்க்கா…

naveen santhakumar

52 ஆயிரத்திற்கு மது வாங்கிய ஒரே நபர்… ஊழியர் மீது வழக்குப்பதிவு

naveen santhakumar

மது பிரியர்களுக்கு ஷாக்…தடுப்பூசி போட்டவர்களுக்கே இனி சரக்கு….

Shobika