இந்தியா

வங்கதேசத்தை உருவாக்கியவர்; மெட்ராஸ் ரெஜிமென்டை நேசித்தவர்!- ஃபீல்டு மார்ஷலாக நியமிக்கப்பட்ட முதல் இந்திய ராணுவ தளபதி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊட்டி:-

ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷாவின் 12-வது நினைவு தினத்தை முன்னிட்டு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மற்றும்  Defence Services Staff College அதிகாரிகள் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் சிறந்த ராணுவ தளபதிகளில் ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்ஷா மிகவும் முக்கியமானவர். இவர் தனது 94வது வயதில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி உயிரிழந்தார்.

யார் இந்த சாம் மானக்ஷா?

கடந்த 1971- ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரில் , வங்கதேசம் என்ற புதிய நாட்டை 13 நாள்களில் உருவாக்கியவர் பீல்டு மார்ஷல் ஜெனரல் சாம் மானக்ஷா.

இந்திய ராணுவத்தில் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்றவர்கள் இருவர், ஒருவர் ஜெனரல் கரியப்பா, மற்றோருவர் ஜெனரல் சாம் மானக்ஷா. 

பிறப்பும், பின்னணியும்:-

பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் 1914-ம் ஆண்டு ஏப்ரல் 3- ந் தேதி பிறந்தவர் சாம் மானக்ஷா. இவர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்தை பெற்ற முதல் ராணுவத் தளபதி ஆவார். 

இவரது சகோதரர் ஜெமி மனேக்ஷாவும் ஆயுதப்படையில் பணியாற்றினார். அவரது தந்தை மருத்துவராக பணியாற்றினார், அவரை பின்பற்றி சகோதரர் ஜெமி மனேக்ஷாவும் மருத்துவரானார். இவர்களை போல் சாம் மனேக்ஷாவும் மருத்துவராக பணியாற்ற விருப்பம் தெரிவித்து லண்டன் செல்ல திட்டமிட்டார். ஆனால் அவரை வெளிநாடு அனுப்ப தந்தை மறுத்ததால், அமிர்தசரஸில் உள்ள ஒரு கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றார்.

ALSO READ  இன்று முதல் ஆட்டோ டெபிட் முறையில் மாற்றம் - ஆர்.பி.ஐ. அதிரடி …!

ஐந்து போர்களை சந்தித்தவர்:-

அதன்பிறகு ராணுவத்தில் பணியாற்றும் ஆர்வத்தில் இந்திய ராணுவ அகாடமி பயிற்சிக்கு விண்ணப்பித்தார். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரில் மனேக்ஷாவும் ஒருவர். 

சுமார் 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய சாம் மானக்ஷா, தனது வாழ்நாளில் அடைந்து போர்களை சந்தித்தவராவார்.

இரண்டாவது உலகப் போர், 1947 இந்தியா-பாகிஸ்தான் யுத்தம், 1965 இந்தியா-சீனா யுத்தம், 1965 இந்தியா- பாகிஸ்தான் யுத்தம், 1971- இந்தியா- பாகிஸ்தான் யுத்தம் ஆகிய ஐந்து பெரும் போர்களில் பங்கேற்றவர். 

உடலில் பாய்ந்த 9 குண்டுகள்:-

1942-ம் ஆண்டு பர்மாவில் ஜப்பானிய படைகளை எதிர்த்து போரிட்ட போது, அவரின் உடலில் 9 குண்டுகள் பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவர் சாம் மானக்ஷா. அப்போது நடந்த அறுவை சிகிச்சையின் போது அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்களில் இருந்து 7 தோட்டாக்கள் எடுக்கப்பட்டன. மேலும் அவரது குடலின் ஒரு பெரிய பகுதியும் இந்த சிகிச்சையில் அகற்றப்பட்டது.

அந்தப் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

1969ம் ஆண்டு இந்தியாவின் 7வது ராணுவ தளபதியாக மனேக்ஷா நியமிக்கப்பட்டார். அவரது வீரத்தை பாராட்ட கூர்கா படைப்பிரிவு வீரர்கள் இவரை ‘சாம் பஹதூர்’ என்று அழைத்தனர். 

இவரது தலைமையில்தான் 1971 – ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டது. முடிவில், வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது. 

ALSO READ  மத்திய அரசு விவாசியிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை !  

1972- ம் ஆண்டு இவருக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது. நாட்டுக்கும் ராணுவத்துக்கும் சாம் மானக்ஷா ஆற்றிய சேவையை பாராட்டி 1973-ம் ஆண்டு ஜனவரி 15- ந் தேதி அவருக்கு ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஃபீல்ட் மார்ஷல் அந்தஸ்து வழங்கப்பட்ட முதல் இந்திய ராணுவ தளபதி என்ற பெருமையை பெற்றவர் இவரே.

இறப்பு:-

ஓய்வுக்கு பிறகு குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் சாம் மானக்ஷா வசித்தார். மெட்ராஜ் ரெஜிமென்டை மிகவும் நேசித்த காரணத்தினால், தன் கடைசி காலத்தை இங்கேயே அவர் கழித்தார். கடந்த 2008- ம் ஆண்டு ஜூன் 27- ந் தேதி சாம் மானக்ஷா இறந்தார். 

உதகமண்டலத்தில் உள்ள பார்சி-ஜோராஸ்ட்ரியன் கல்லறை  தோட்டத்தில் அமைந்துள்ள சாம் மானக்ஷாவின் நினைவிடம் அமைந்துள்ளது.

பயோபிக்:-

சாம் மானெக்ஷா தோற்றத்தில் நடிகர் விக்கி கௌஷல்.

மானெக்ஷாவின் வாழ்க்கையை தழுவி Manekshaw என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது. மேக்னா குல்சார் (Meghna Gulzar) இயக்கத்தில் விக்கி கௌஷல் (Vicky Kaushal) மனேக்ஷா கதாப்பாத்திரம் ஏற்று  நடிக்க உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. விக்கி கௌஷல் Uri: The Surgical Strike படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனைவியின் பிரசவ அறைக்குள் அனுமதிக்காததால் மருத்துவரின் காதைக் கடித்த நபர்…

naveen santhakumar

டிரம்ப் உணவு உண்ண தயாராகும் தங்க-வெள்ளி பாத்திரங்கள்…

Admin

பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தனிஷ் சித்திகியின் சக்திவாய்ந்த படங்கள்..!

naveen santhakumar