தமிழகம்

கொரோனாவில் இருந்து மீண்ட அனுபவம் – நெகிழ்ச்சி பதிவு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் அனந்த கோமதி அவர்களின் அனுபவம்…

மே 25 ஆம் தேதி அலுவலகம் திறந்தாயிற்று, 5 குடும்பங்கள் அந்த சட்ட அலுவலகத்தை நம்பியே! அங்கு ஜூனியர்கள், மேலாளர்கள், யாரும் எந்த தயக்கமும் காட்டவில்லை, 4 முறை சென்றும் க்ளைன்ட்கள் பெரிதாக யாரும் வரவில்லை.

ஜூன் 4 மாலை உடல் வலியும் குளிரும் ஏற்பட்டு அடுத்த நாள் காலை கடும் காய்ச்சல். உடனே, மருத்துவரிடம் சென்று மாலை நூரையீரலை சிடி ஸ்கேன் எடுத்துயிற்று. நுரையீரல் நிபுணர் (Pulmonologist) கொரோனா இல்லை என்றார்.

CT Scan (File).

பின் கிராம் பாசிடிங் (Gram positive), கிராம் நெகடிங் (Gram negative), ஆன்டிபயாடிக் வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்த மறுநாள் காய்ச்சல் விட்டது. ஆனால் கடுமையான தொண்டை வலி மாத்திரை வேலை செய்யவில்லையே என்று மருத்துவரிடம் சொல்ல மருந்தை மாற்றி கொடுத்தார்.

4 நாட்களுக்கு பிறகு எனக்கு வலி குறைந்து Cold ஆரம்பித்தது. இப்போதும் கூட சாதாரண காய்ச்சல் என்று எண்ணி தான் Nasal spray எடுத்தேன். ஜூன் 9ம் தேதி காலை சுத்தமாக என்னால் நுகர முடியவில்லை (Anosmia) கொரோனா பரிசோதனை எடுத்தாயிற்று, 12ஆம் தேதி பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது.

கணவர், குழந்தைகள், ஸ்டாஃப் என அனைவருக்கும் டெஸ்ட் எடுத்த பின்னர் 14ம் ரிசல்ட் வந்தது. கணவர் உட்பட சிலருக்கு பாஸிடிவ். வாழ்வில் அதுவரையில் நான் உணர்ந்திடாத ஒரு வலி, நெஞ்சில் பெரும் பாரம், ஒரு பக்கம் பயம் வேறு.

குடியிருப்பின் அசோஸியேசனுக்கு தகவல் கொடுத்தேன். போன் நம்பர் தெரியாமல் messengerல் வீட்டு சாப்பாடு அனுப்பட்டுமா ஆன்ட்டி ! என கேட்ட எங்கள் பக்கத்து ஃபளாட் குழந்தை, ஆறுதலாய் இருந்தது குடியிருப்பு செக்ரடரி மணி மற்றும் அவரது மனைவி. மணி சார் தொற்று என்ற உடனேயே ஆயுர்வேத மருந்து ஒன்றை கொடுத்தார். வீட்டு வாசலில் அந்த மருந்தை வைத்து விட்டு போன் மூலமாக மருந்து வைத்த விஷயத்தை கூறினார் மணி சார்.

ALSO READ  இந்தியாவில் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு 

எனக்கும் என் கணவருக்கும் தொற்று வந்தவுடன் உடனே ஓரு ஹோமியோபதி மருந்தை அனுப்பிய கணவரின் சேர்மன் என கொரோனா என்றவுடன் தெறித்து ஓடும் சமூகத்தில் இவர்களின் அன்புக்கு ஏதும் ஈடாகாது.

நம்பிக்கை தந்த ஆயுர்வேதம்:-

மறுநாள் ஆயுர்வேத சிகிச்சை மீது பெரிய நம்பிக்கை இல்லாத போதும், மருந்து அனுப்பியவரின் மீதான மரியாதை காரணமாக மருந்தை உட்கொண்டேன். மதியம் 50% நுகரும் திறன் வந்து விட்டது. எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

File.

அடுத்த வேளை மருந்து ஆவலுடன் உட்கொண்டேன். மறுநாள் முழுமையாக வாசனை உணரப்பட்டது. நம்பிக்கை துளிர்தது. (ஆயுர்வேத மருந்துகள் எடுத்த உடன் நுகரும் திறன் உடனே வந்ததை எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து மட்டுமே கூறுகிறேன்).

தங்களுக்குள் எவ்வளவு பயம் இருந்தாலும் வெளிகாட்டிக்கொள்ளாமல் தைரியமாக இருந்து எனக்கு பக்கபலமாக இருந்த எனது பெற்றோர். அதேபோல் எனக்கு பெரும் ஆறுதல் அளித்த என் இனிய நண்பர்கள், குறிப்பாக எனது சகோதரர் குமார் துரைசாமி அவர்களின் வார்த்தைகள் மிக மிக ஆறுதல் அளித்தது. எனக்கு ஆரம்பம் முதல் இறுதிவரை மிகுந்த பக்க பலமாய் இருந்தது எனது சகோதரர் குமார் துரைசாமி.

எங்களுக்காக நிதம் பிரார்த்தனை செய்த பாதரியார் ஜெகத் கஸ்பர், மூத்த வழக்கறிஞர்கள் V.கார்த்திக், எஸ்.பார்த்தசாரதி, எம்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் என்னை மனதளவில் தயார்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஆவர்.

Jegath Gaspar.

இதில், மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன் நான் மருத்துவமனை செல்ல வேண்டி வந்தால் அதற்கு என்னை மனதளவில் முழுமையாக தயார்படுத்தியவர்.

ALSO READ  தொடரும் மாணவர்கள் தற்கொலை… சந்தேகத்தில் போலீஸ்…

அரசின் நடவடிக்கைகள் மிகவும் போற்ற தக்கது. ஹோம் குவாரன்டைனில் இருந்த போது எங்களுக்கு சிறிய சிரமம் கூடவராமல் அரசு பார்த்துக் கொண்டது. பல முறை தொலைபேசி மூலம் உடல் நலம் மற்றும் உள்ள நலமும் கேட்டறிதனர். அனைவருமே அன்பாக ஆறுதலாக தான் பேசினர். இந்த தொற்று பரவலை சிறப்பாக கையாளும் அரசு, முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் எங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த கொரோனாவால் நான் அறிந்தது:-

1) ஆயுர்வேதம், ஹோமியோபதி, அலோபதி என அனைத்து மருந்துகளுமே நல்ல பலனை அளிக்கிறது.

2) இந்த குவாரண்டைன் நாட்கள் மனிதத்தையும், மனிதாபிமானத்தையும் எனக்கு பரிபூரணமாக உணர்ந்தியது.

3) நோய் பெரியதல்ல, நம் பயம் தான் பெரியது, நம் கை பிடிக்க மனித தெய்வங்களை இறைவன் ஆங்காங்கு வைத்துள்ளான்.

4) நாம் நம் மனதை வென்றால் நோயை சுலபமாக வெல்லலாம். அதற்கு நம்மை சுற்றியிருப்பவர்களின் அரவணைப்பு மிக முக்கியம்.

5) நல்ல உணவும் நல்ல மனநிலையும் நோயை வெற்றி கொள்ளும். தைரியமின்மை தான் நம்மை வீழ்த்துமே அன்றி வைரஸ் அல்ல.

கொரோனா வந்தவர்களுக்கு சொல்வது:-

  1. பயப்படாதீர்கள், இது அனைவரையும் கொல்வதில்லை.
  2. ஆயுர்வேதம், சித்தா, ஹோமிமோபதி, அலோபதி என அனைத்து மருந்துகளுமே நல்ல பலன் அளிக்கும்.
  3. இது நம்மால் கட்டாயம் வெற்றி கொள்ள கூடிய நோய்தான். எனவே தைரியமாக எதிர் கொள்ளுங்கள்.
  4. இது போன்ற இணை நோய்கள் (Co-morbidity) இருப்பின் சற்று கவனம் அதிகம்.

நான் கண்ட மனிதத்தை மற்றவர்களுக்கு திருப்பி தர கடமைப்பட்டுள்ளேன். நன்றி

மருத்துவத்தையும் கடந்து சக மனிதர்களின் அன்பும், மனதைரியமும் எந்தவொரு நோயிலிருந்தும் மீள செய்யும்…


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

naveen santhakumar

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் வைத்தே பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி :

naveen santhakumar

தமிழகத்தில் ஊரடங்கை வரும் ஏப்ரல் 30 வரை நீட்டித்து முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு…

naveen santhakumar