உலகம்

டிக்டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட 5 பெண்களுக்கு 2 ஆண்டுகள் சிறை, 1.5 லட்சம் அபராதம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கெய்ரோ:-

எகிப்து நாட்டில் ஒழுங்கு விதிமுறைகளை மீறி ஆண்களை கவரும் வகையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட 5 பெண்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையும் 1,40,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. 

உலகில் பெண்களுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்லாமிய நாடுகளில் எகிப்தும் ஒன்று. அங்கு பெண்களுக்கு என தனியே ஒழுங்குமுறை சட்டங்கள் உள்ளன. 

இந்நிலையில் அந்நாட்டின் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் படித்துவரும் ஹனீன் ஹோசம் என்ற 20 வயது இளம்பெண் டிக்டாக்-ல் கவர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளதோடு மற்ற பெண்களையும் டிக்டாக்கில் ஆண்களை கவரச்செய்யும் வகையில் வீடியோக்களை வெளியிட தூண்டி வந்துள்ளார்.  மேலும் அவரை டிக்டாக்கில் பின் தொடர்பவர்கள் அதிகரித்ததை தொடர்ந்து அதன் மூலம் வருமானமும் ஈட்டி வந்துள்ளார். இவரை விட்டுவிட்டா கொட்டும் இன்ஸ்டாகிராம் கணக்கை மில்லியன் கணக்கானோர் பின்தொடர்ந்து வந்தனர்.

From Left Mawada al-Adham, Haneen Hossam.

இதேபோல மவாடா அல் ஆதம் என்பவரும் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு வந்தார் அவரது கணக்கை சுமார் 20 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

ALSO READ  வெற்றி வாகை சூடி அமெரிக்க அதிபர் ஆகிறார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்

இந்நிலைக்கு இந்த இருவரும் சமீப காலமாக சமூக ஊடகங்களில் அநாகரீகமான புகைப்படங்களையும், வீடியோக்களை டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர். 

இதனை அடுத்து அவர் மீது புகார்கள் குவிந்த நிலையில் அவரும் அவருக்கு உடந்தையாக இருந்த 4 பெண்களும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நாட்டின் ஒழுங்கு விதிமுறைகளை மீறியதற்காக மவாடா அல் ஆதம் (Mawada al-Adham) மற்றும் ஹனீன் ஹோசம் (Haneen Hossam) உள்ளிட்ட 5 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 லட்சம் எகிப்திய பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 1,40,000 ரூபாய்) அபராதம் விதித்து என உத்தரவிடப்பட்டுள்ளது. 

ALSO READ  சில ஜோக்கர்கள் எனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேக் செய்து விட்டனர் -நஸ்ரியா

இதனிடையே சமூக வலைதளங்களில் பெண்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் பெண்கள் மீதான இது போன்ற கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என அங்குள்ள மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எகிப்தில் இது போன்று சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடும் பெண்களை தண்டிப்பது இது புதிதல்ல. கடந்த ஆண்டு, ஒரு பெண் பாப் பாடகிக்கு இதேபோன்ற குற்றச்சாட்டில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகள்களின் படிப்புக்காக தினமும் 12 கி.மீ. பயணம் செய்யும் தந்தை

Admin

உயிரியல் ஆய்வாளரும் மருத்துவத்துக்கான நோபல் வென்ற எலிசபெத் ஹெலன்

Admin

இங்கிலாந்து சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…..

naveen santhakumar