உலகம்

மகள்களின் படிப்புக்காக தினமும் 12 கி.மீ. பயணம் செய்யும் தந்தை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மகள்களின் படிப்புக்காக தினமும் 12 கி.மீ. பயணம் செய்யும் தந்தை

ஆப்கானிஸ்தானில் தனது மகள்களின் படிப்புக்காக 12 கி.மீ. பயணம் செய்யும் தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நிரம்பி காணப்படும். குறிப்பாக ஆப்கனில் தலிபான்களின் அச்சுறுத்தலால் அந்நாட்டில் பெண் கல்வி என்பது கானல் நீராகவே உள்ளது. சிலர் எவருக்கும் அஞ்சாமல் பெண் குழந்தைகளை கல்வி பயில அனுமதி வழங்குகின்றனர்.

ALSO READ  டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாக்கிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த இந்தியா

இந்நிலையில் பக்திகா மாகாணத்தைச் சேர்ந்த மியா கான் என்பவர் தனது மகள்களின் படிப்புக்காக 12 கி.மீ. பயணம் செய்து வருகிறார். அவர் வீட்டில் இருந்து
12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நுரானியா பள்ளிக்கு பைக்கில் தனது மகள்களை அழைத்து சென்று பள்ளி முடியும் வரை அங்கேயே காத்திருந்து தனது மகள்களை அழைத்து வருகிறார்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து மியா கான் கூறுகையில் , “நான் படிக்காததால் எனது மகள்கள் கல்வி பெறுவது அவசியம் என நினைத்தேன். எங்கள் பகுதியில் பெண் மருத்துவர்களே இல்லை. எனது மகன்களைப் போல எனது மகள்களும் கல்வி பெற வேண்டும் என்பதே என் கனவு” என்று தெரிவித்தார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பதவியை ராஜினாமா செய்த ஸ்வீடன் நாட்டு பிரதமர் :

Shobika

அமேசான் நிறுவனர் உடன் விண்வெளி செல்லும் 5-வது இந்தியர் சஞ்சால் கவான்டே..!

naveen santhakumar

பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா அசர் ஐ திருமணம் செய்து கொண்டார்

News Editor