இந்தியா

வறுமையிலும் சாதிக்க துடித்த மாணவனுக்கு ரேஸ் சைக்கிள் வழங்கிய குடியரசுத் தலைவர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

வறுமையிலும் மாநில சைக்கிள் பந்தயத்தில் சாதித்த மாணவனுக்கு பக்ரீத் பரிசாக ரேஸ் சைக்கிளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.

டெல்லியில் உள்ள சர்வோதயா பால் வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து ஒரு மாணவன் ரியாஸ். சைக்கிள் ரேஸிங்கில் மிகப் பெரிய சாதனையாளராக வரவேண்டும் என்பது ரியாஸின் ஆசை. இவரது தந்தைக்கு மிக சொற்பமான வருமானமே கிடைப்பதால் பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டே பகுதிநேர வேலையாக காசியாபாத்தில் உள்ள உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேளையும் செய்து வருகிறார் ரியாஸ். 

ALSO READ  பிரதமர் மோடியை ட்விட்டரில் ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை அன்ஃபாலோ செய்தது....

இத்தனை வறுமைக்கு நடுவிலும் படிப்பையும், வேலையை முடித்த பிறகு சைக்கிள் ரேசிங் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இத்தனை வறுமைக்கு நடுவிலும் சைக்கிள் பந்தயத்தில் சாதித்த ரியாசுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பக்ரீத் பரிசாக ரேஸ் சைக்கிள் ஒன்றை பரிசளித்துள்ளார். 

தற்பொழுது ரியாஸூக்கு பிரமோத் ஷர்மா  என்ற பயிற்சியாளர் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் சைக்கிளிங் பயிற்சி அளித்து வருகிறார். 

ALSO READ  புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் !

கடந்த 2017ஆம் ஆண்டு டெல்லியில் மாநில அளவில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் தேசிய அளவில் நான்காம் இடம் பிடித்தார். சர்வதேச அளவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது கனவாக உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘சீன வைரஸ்’ என்று அழைக்க வேண்டாம்… இந்தியாவிடம் சீனா வேண்டுகோள்…

naveen santhakumar

Mostbet Indian: Official Site, Enrollment, Bonus 25000 Logi

Shobika

அலட்சியப்படுத்தினால் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவார்கள்- இந்திய நுண்ணுயிரிகள் மருத்துவர் சங்கம் எச்சரிக்கை….

naveen santhakumar