மருத்துவம்

பாதங்களில் பித்தவெடிப்பா?? இதோ ஹோம் டிப்ஸ்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பித்த வெடிப்பு:-

பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். 

பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம். இதனால் வெடிப்பு ஏற்பட்டு, வெடிப்பு புண்ணாகி கஷ்டப்படுகின்றனர்.

இதில் மண், தூசுக்கள் ஒட்டிக் கொள்ளும் போது தொற்று ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. இதனால் கடுமையான வலி ஏற்படும். நாள் முழுவதும் ஓடியாடி வேலை பார்க்கும் போது இந்த வலி அதிகரிக்கும். 

காரணங்கள்:-

தலைமுடியையும், சருமத்தையும் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கும் நாம் பாதங்களை பராமரிக்க மறந்து விடுகிறோம். பெரும்பாலான பெண்களுக்கு பாதங்களில் பித்தவெடிப்பு ஏற்படும்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. 

தண்ணீர் குறைவாக குடிப்பதும் பித்தவெடிப்பு ஏற்பட காரணம். பாதங்களில் ஈரப்பசை வறட்சியால் குதிகால் பகுதியில் வெடிப்பு ஏற்படும். 

இதனால் நமது தலை முதல் பாதம் வரை பராமரிக்க வேண்டியது அவசியம்.  பித்தவெடிப்பை சரிசெய்ய வீட்டில் இருந்தே என்ன செய்யலாம் என்பதை இப்போது காண்போம். 

வீட்டிலேயே மேற்கொள்ள சில வைத்தியங்கள்:-

முதல் மற்றும் எளிமையான வைத்தியம் அதிக அளவில் தண்ணீர் குடியுங்கள்.

ALSO READ  உடலில் ரத்தம் ஊற வேண்டுமா??? 

பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். 

பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும்.

அரம் அல்லது சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். 

எண்ணெய் மசாஜ்:-

ஆமணக்கு, ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெய் மூன்றையும் ஒவ்வொரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒன்றாக கலந்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். 

அதன்பிறகு வாஸ்லின் தடவிக் கொள்ளலாம். இதன் மூலம் எண்ணெய் சருமத்திற்குள் நுழையும். தூங்குவதற்கு முன்பு இதனை செய்து சாக்ஸ் அணியுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் பாதத்தை கழுவிக் கொள்ளுங்கள். 

இதனால் நல்ல பலன் ஏற்படுவதை உங்களால் உணர முடியும். பித்தவெடிப்பு மட்டுமல்லாமல், பாதத்தை மென்மையாக மாற்றவும் உதவும்.

வாழைப்பழம் மற்றும் தேன்:-

வாழைப்பத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் குதிகால் முழுவதும் தடவி மெதுவாக தேய்த்துக் கொள்ளுங்கள். 

அரை மணி நேரத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் குதிகால்களை கழுவிக் கொள்ளுங்கள். அதன்பிறகு தண்ணீரை துடைத்து விட்டு, நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் மாய்சரைசர் (Moisturizer) பயன்படுத்துங்கள். உங்கள் பாதம் வறண்டு விடாமல் பாதுகாப்பதற்கு தேன் உதவும். 

ALSO READ  இதை மட்டும் நீங்க செஞ்சீங்கன்னா….. உங்கள் உடல் எடை குறைந்து இலியானா போல் ஆவீர்கள்:

உப்பு மசாஜ்:-

உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். குதிகாலில் வெடிப்பு உள்ள இடங்களில் இந்த கலவையை தேய்த்துக் கொள்ளுங்கள். 

அதன்பிறகு பியூமிஸ் கல் வைத்து மெதுவாக தேய்க்கவும். இது உங்கள் பாதவெடிப்பை கீறி விடாத வண்ணம் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள். அரை மணி நேரம் இப்படி செய்து விட்டு சோப்பு நீரில் கால்களை கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் பாதத்தை உலர்த்திய பிறகு கிரீம் பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்காதீர்கள். 

மேலும் சில டிப்ஸ்:-

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு ஊற்றி 10 நிமிடம் பாதங்களை வைக்கலாம். வாரம் ஒருமுறை இதனை செய்தால் போதுமானது. 

கடுகு எண்ணெயை தினமும் பாதத்தில் தடவி வரலாம். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து பாதங்களில் தேய்த்து வந்தால் பித்தவெடிப்பு குணமாகும். இவற்றினை பயன்படுத்தி உங்கள் பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் இருந்து விடுபங்கள்.

பாதங்களில் பித்தவெடிப்பு ஏற்பட்டவர்கள் வீட்டிலேயே இந்த வைத்தியங்களை மேற்கொண்டு பலன் பெறுங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆரோக்கியத்தை தரும் பயோட்டின் !

Admin

ஓமத்தின் ஒப்பற்ற நன்மைகள்:

naveen santhakumar

மோடி – சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

Admin