இந்தியா

வறுமையிலும் சாதிக்க துடித்த மாணவனுக்கு ரேஸ் சைக்கிள் வழங்கிய குடியரசுத் தலைவர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

வறுமையிலும் மாநில சைக்கிள் பந்தயத்தில் சாதித்த மாணவனுக்கு பக்ரீத் பரிசாக ரேஸ் சைக்கிளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.

டெல்லியில் உள்ள சர்வோதயா பால் வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து ஒரு மாணவன் ரியாஸ். சைக்கிள் ரேஸிங்கில் மிகப் பெரிய சாதனையாளராக வரவேண்டும் என்பது ரியாஸின் ஆசை. இவரது தந்தைக்கு மிக சொற்பமான வருமானமே கிடைப்பதால் பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டே பகுதிநேர வேலையாக காசியாபாத்தில் உள்ள உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேளையும் செய்து வருகிறார் ரியாஸ். 

ALSO READ  Parimatch On Line Casino Polska Bonus +100% Za Pierwszy Depozyt

இத்தனை வறுமைக்கு நடுவிலும் படிப்பையும், வேலையை முடித்த பிறகு சைக்கிள் ரேசிங் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இத்தனை வறுமைக்கு நடுவிலும் சைக்கிள் பந்தயத்தில் சாதித்த ரியாசுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பக்ரீத் பரிசாக ரேஸ் சைக்கிள் ஒன்றை பரிசளித்துள்ளார். 

தற்பொழுது ரியாஸூக்கு பிரமோத் ஷர்மா  என்ற பயிற்சியாளர் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் சைக்கிளிங் பயிற்சி அளித்து வருகிறார். 

ALSO READ  ஒருவழியாக எண்ணெய் கிணற்றில் எரிந்த தீ கட்டுக்குள் வந்தது…..

கடந்த 2017ஆம் ஆண்டு டெல்லியில் மாநில அளவில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் தேசிய அளவில் நான்காம் இடம் பிடித்தார். சர்வதேச அளவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது கனவாக உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முடிவுக்கு வந்தது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் புளூ டிக் சர்ச்சை…! 

naveen santhakumar

Análise informativa do Casino B1 Bet: tudo o que você precisa sabe

Shobika

Заработать Деньги В Интернет Новый Казахстан 2

Shobika