உலகம்

பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு மூவர்ணக் கொடியுடன் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்லாமாபாத்:-

பாகிஸ்தானின் பிரபல செய்தித் தொலைக்காட்சி திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பிரபல செய்தி தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சியில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் விளம்பரம் ஒளிபரப்பப்பட்ட சமயத்தில், திடீரென திரையில் மூவர்ணக்கொடி தோன்றி சுதந்திர தின வாழ்த்துக்கள் ஒளிபரப்பாகியுள்ளது.

ALSO READ  வானில் தெரிந்த விசித்திர பொருளால் பாகிஸ்தானில் பரபரப்பு:

தொலைக்காட்சி விளம்பரங்களில் இந்தியாவின் மூவர்ணக் கொடி பறந்ததோடு கீழே Happy Independence Day என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. 

இதுதொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ALSO READ  யானைகளை வேட்டையாட அரசு அனுமதி அதிர்ச்சி தகவல்!

இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக டான் தொலைக்காட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல்: சீனாவிற்கு எதிராக விசாரணை- இந்தியா ஆதரவு..

naveen santhakumar

உலகம் முழுவதும் யூடியூப் சேவைகள் திடீர் முடக்கம் – பயனாளர்கள் பாதிப்பு

naveen santhakumar

வானில் தெரிந்த விசித்திர பொருளால் பாகிஸ்தானில் பரபரப்பு:

naveen santhakumar