உலகம்

கொரோனா பரவல்: சீனாவிற்கு எதிராக விசாரணை- இந்தியா ஆதரவு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

கொரோனா (Covid-19) தொற்று பரவியது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனா மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், அதுதொடர்பாக விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இந்த கொம்பு கூட கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் சில நாடுகளும் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.

ALSO READ  அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு டிரம்ப் வாழ்த்து !

மேலும்  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்றும் அதன் தலைவர் டெட்ரோஸ் சீனாவுடன் சேர்ந்து உண்மையை மூடி மறைப்பதாக தொடர்ந்து கூறி வந்தார்.

இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர் அழுத்தம் காரணமாக கொரோனா பரவல் தொடர்பாக சீனா மீது விசாரணைக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த விசாரணைக்கு கொரோனா தொற்று பிரச்சனை முடிவுக்கு வரும் நிலையில் முழுஒத்துழைப்பு தர தயார் என சீன அதிபர் ​ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். வளரும் நாடுகள் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர அடுத்த 2 ஆண்டுகளுக்கு எடுக்கும் நடவடிக்கைக்கு சீனா 2 பில்லியன் அமெரிக்க டாலர் பண உதவி செய்யும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். 

ALSO READ  மோடி - சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

இதனிடையே உலக சுகாதார சபையின் (World Health Assembly) நிர்வாக குழு தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் ரோபோக்கள்..

naveen santhakumar

பொங்கல் விழாவை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து

Admin

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலாஹாரிஸ் வருகைக்காக இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் – பிரதமர் மோடி

News Editor