தமிழகம்

பாஜகவில் இணைந்தார், திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

திமுகவின் தலைமை நிலைய செயலாளராகவும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர், கு.க.செல்வம். இந்நிலையில் டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். தற்போது திமுக சார்பில் போட்டியிட்டு ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ.வாக உள்ளார். 

ALSO READ  கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு நீர் மோர்  விநியோகம் !

சென்னை திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்காததால் கு.க.செல்வம் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இளைஞர் அணியை சேர்ந்த சிற்றரசு நியமனம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகனுடன், டில்லி சென்ற செல்வம் அங்கு பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்தார்.

ALSO READ  டெல்லி செல்லும் முதலமைச்சர்...தொகுதி பங்கீடு குறித்து பேச வாய்ப்பு !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவலை தடுக்க 18 வகையான மூலிகை மருந்துகளை திருடிய திருடர்…

naveen santhakumar

பகலில் கொரோனாவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா… இரவு நேர ஊரடங்கு குறித்து போக்குவரத்து ஊழியர்கள் கருத்து !  

News Editor

கொரேனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சியின் புது APP…..

naveen santhakumar