தமிழகம்

கொரேனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சியின் புது APP…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் ஒரு சமூக தொற்றாக மாறாமல் தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

GCC App (Greater Chennai Corporation App) இந்த மொபைல் செயலி மூலமாக கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது சுய தனிமையில் (Self-Isolation) இருப்பவர்கள் ஜியோ டேக் (Geo-Tag) வசதி மூலமாக தங்களையோ, தங்களது வீட்டையோ அல்லது தனிமைப்படுத்த பட்டதற்கான ஸ்டிக்கரையோ சேர்த்து இந்த செயலியில் அனுப்பலாம்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையடுத்து, அதை ஒரு சமூக தொற்றாக மாறாமல் தடுப்பதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த செயலியை வடிவமைத்த அழகுபாண்டியராஜா தெரிவித்தார்.

இவர் இந்த மொபைல் செயலியை சில தன்னார்வலர்கள் மற்றும் மிஸ்டர் கூப்பர் (Mr Cooper) என்ற நிறுவனத்தின் உதவியோடு வடிவமைத்துள்ளார்.

ALSO READ  தோசை சுட்டுத் தராதது ஒரு குத்தமா???? என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா!!!!!!

இதுகுறித்து கூறிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் இது போன்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மேலும் தெரிவித்தார் அழகு பாண்டியராஜா இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி தங்கள் அல்லது தங்களது வீட்டின் புகைப்படத்தை ஜியோ டேக் செய்து அனுப்புவதன் வாயிலாக அந்த குறிப்பிட்ட வீட்டின் லொகேஷன் எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலமாக வீட்டை அடையாளம் கண்டு தனிமைபடுத்துவது எளிதாகிறது.

ALSO READ  உதகையில் நிலச்சரிவு - ரயில் சேவை இன்று ரத்து..

இந்த மொபைல் செயலியைப் பயன்படுத்தி சுகாதாரத் துறை பணியாளர்கள் ஆயிரக்கணக்கான குடிமக்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி உள்ளார்கள்.

அதேபோல், ஊரடங்கு காலத்தில் சட்டத்தை மதிக்காமல் திறந்து வைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் முறையாக சமூக விலகலை கடைபிடிக்காத கடைகள் போன்றவற்றை படங்களை பதிவேற்றம் செய்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த செயலியை 10 மில்லியன் மக்கள் வரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதில் எந்தவித தடங்கலும் ஏற்படாது என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து – மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

naveen santhakumar

10, 12-ம் வகுப்புகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கே அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு..!!!!

naveen santhakumar

மிரட்டும் கொரோனா; விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள் !

News Editor