உலகம்

லெபனானை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பயங்கர தீ விபத்து… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ரூட்:-

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் அந்நகரமே உருக்குலைத்து, சின்னா பின்னமாக்கிவிட்டது.   இந்நிலையில் ஐக்கிய அமீரக எமிரேட்ஸில் பழ மார்க்கெட் ஒன்றில் பயங்கர தீ விபத்து நடந்தது.

கிழக்கு லெபனானில் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 4000 மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் வளைகுடாவில் ஐக்கிய அமீரக எமிரேட்சின் வடமேற்கில் உள்ள அஜ்மான் என்ற தொழில் நகரில் உள்ள பிரமாண்ட காய்கனி, பழங்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் நேற்று மாலை 6:30 மணியளவில் பயங்கர தீ விபத்து சம்பம் நடந்தது. தீயினால் ஏற்பட்ட கரும்புகை பல அடி உயரத்திற்கு கிளம்பியதால் அருகே இருந்த வானுயர கட்டங்கள் கரும்புகையால் சூழப்பட்டன. 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. துபாய், சார்ஜா, உம் அல் குவைன் (Umm Al Quwain) ஆகியவற்றைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் அஜ்மான் தீயணைப்பு படை வீரர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ALSO READ  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை…...

இதுவரையில் இந்தத் தீவில் எத்தனை பேர் பாதிக்கப் பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனினும் இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  கடும் நெருக்கடி : குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

கொரோனா பரவல் காரணமாக நீண்ட காலமும் மூடப்பட்டிருந்த இந்த மார்க்கெட் இப்பொழுது திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றால் ஐக்கிய அமீரகத்திற்கு விமான போக்குவரத்து தடை !

News Editor

உலகில் 11.08 கோடியாக உயர்ந்த கொரோனா தொற்று..!

News Editor

பாகிஸ்தானில் இருந்து காபூலுக்கு முதல் விமானம் வந்தது

News Editor