தமிழகம்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் கொள்ளுப் பேத்தி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழக கட்சியை ஆரம்பித்த ஒரு மாணவர் அண்ணாதுரையின் கொள்ளுப்பேத்தி பிரித்திகா ராணி (23) வெற்றி பெற்றுள்ளார்.

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் அண்ணாவின் கொள்ளுப் பேத்தியான பிரித்திகா ராணி, அகில இந்திய அளவில் 171-வது இடத்தைப் பிடித்துள்ளார். யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அவர், ஐ.எஃப்.எஸ் எனப்படும் அயலக பணியில் இணைய ஆர்வம் கொண்டுள்ளார்.

ALSO READ  ஆத்தூரில் காவல் ஆய்வாளர் உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று !

முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் வளர்ப்பு மகனான சி.என்.ஏ.பரிமாளத்தில் மகள் இளவரசியின் மகள் தான் இந்த பிரித்திகா ராணி. இவரது தந்தை எம்.எம்.முத்துக்குமார் ஆடைகள் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். பிரித்திகா ராணி தன்னுடைய முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்திகா ராணி சிறந்த டென்னிஸ் பிளேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் கலந்து உள்ளார். ரோஜர் ஃபெடரர் மற்றும் லியாண்டர் பயஸ் பிரித்திகா-க்கு விருப்பமான டென்னிஸ்  வீரர்கள் ஆவர். மேலும் இந்த ஆண்டு பிரித்திகா ராணியின் சகோதரி ஸ்ருத்திகா ராணி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  ஜனவரி-5 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் தி.மு.க.தலைவர் ஸ்டாலின்:

இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற அண்ணாதுரையின் கொள்ளுப் பேத்திக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், “அண்ணாவைப் போல் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் மென்மேலும் பல உயரங்களை அடைந்திட வேண்டும்” என வாழ்த்து மடல் ஒன்றினையும் அவருக்கு எழுதியுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மறுப்பு தெரிவித்த விஜய்….கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை….

naveen santhakumar

பென்னிகுவிக் கல்லறை சேதம் செய்யப்பட்டது குறித்து ஓபிஎஸ் கண்டனம்:

naveen santhakumar

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 499 செலுத்தி முன்பதிவு

News Editor