இந்தியா

உத்தர்காண்டில் சிக்கியது அரியவகை சிவப்பு பவழ நாகம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நைனிடால்:-

உத்தர்காண்டில் மிகவும் அரியவகை சிவப்பு பவழப் பாம்பு ஒன்று  நைனிடால் பகுதியில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது.

உத்தர்கண்ட் மாநிலத்தில் நைனிடால் அருகே பிந்துகட்டா பகுதியில் மிகவும் அரிய  சிவப்பு பவழ குக்ரி (Red Coral Kukri) வகை பாம்பு ஒன்று வீடு ஒன்றிலிருந்து வனத்துறையினரால் பிடிபட்டது. 

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

கடந்த 1936 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் லட்சுமிபூர் கேரிப் பகுதியில் முதன் முறையாக தென்பட்டது. இவற்றில் அறிவியல் பெயர் ஓலிகோடான் கேரியென்ஸிஸ் (Oligodon kheriensis) ஆகும்.   இது பாம்பின் பின் பகுதியில் இடம் பெற்றுள்ள குக்ரி என்ற பெயரானது கூர்க்காக்கள் பயன்படுத்தும் குக்ரி (Kukri) என்ற வளைந்த கக்தியை குறிக்கும். ஏனெனில் இவற்றின் பற்கள் இந்தக் குக்ரி கத்தியைப் போன்று வளைந்து இருக்கும். இதனால் நேற்று என் பெயர் சிவப்பு பவழ குக்ரி எண்ணப்பட்டது.

ALSO READ  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-ன் காலமானார்.

தெராய் (Terai) கிழக்கு பிரதேச வன  அதிகாரி நிதிஷ் மணி திரிபாதி கூறுகையில்:-

நைனிடால் மாவட்டத்திலுள்ள பிந்துகட்டா (Bindhukhatta) பகுதி அருகே அமைந்துள்ள குர்ரியா கட்டா (Kurriya Khatta) கிராமத்தில் இருந்து கவிந்திர கோரங்கா (Kavindra Koranga) என்பவர் தங்கள் வீட்டு அருகில் இருந்த சிவப்பு நிற பாம்பு சிக்கியதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து கௌலா (Goula) வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கிராம மக்கள் அந்த சிவப்பு நிற பாம்பினை பிடித்து சாக்கு ஒன்றினுள் போட்டு வைத்திருந்தனர். 

இந்திய வனவாழ் நிறுவனத்தை சேர்ந்த விபின் மௌரியா இந்த அரிய வகை பாம்பு குறித்து கூறுகையில்:-

ALSO READ  மனைவிக்கு நிலவில் இடம் வாங்கிய கணவர்..!

இதற்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த வகை சிவப்பு பவழ குக்ரி வகை பாம்பு இரண்டு தடவை மட்டும் தான் தென்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் எல்லைப் பகுதியில் தெராய் கிழக்கு வனச்சரகத்திற்க்கு உட்பட்ட சுராய் வனப்பகுதியில் (Surai Forest) முதன் முறையாக இந்த வகை பாம்பு தென்பட்டது. அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு மீண்டும் சுராய் வனப் பகுதியிலேயே இந்த பாம்பு தென்பட்டது.

இந்த வகை பாம்புகள் இரவில் நடமாடும் (Nocturnal). மேலும், இவை விஷத் தன்மை அற்றவை. இந்த வகை பாம்புகள் சிவப்பு மற்றும் அடர் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இவை 1972 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்..

Shanthi

மறைந்த பாடகர் எஸ்.பி.பி., பிவி சிந்து உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் – குவியும் வாழ்த்துகள்!

naveen santhakumar

1win Bahis Sitesi Türkçe Giriş Yap Ve Kaydol İlk Para Yatırma Işleminizde 0 Kazanın

Shobika