உலகம்

கூகுள் பிளே மியூசிக்கிற்கு டாட்டா காட்டும் நேரம் வந்துவிட்டது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கூகுள் பிளே மியூசிக், வரும் அக்டோபரிலிருந்து தன்னுடைய சேவையை இந்தியாவில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டுமின்றி; உலகின் வேறு பல நாடுகளிலும் இந்த சேவை நிறுத்தப்பட இருக்கிறது, என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இச்சேவை நிறுத்தப்படுவதால், வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவை இல்லை என்றும், அவர்கள் தங்களுடைய பிளே லிஸ்ட், லைப்ரரி, விருப்ப தேர்வுகள் முதலியவற்றை, ‘யு டியூப் மியூசிக்’கிற்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும், கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கு டிசம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும், தெரிவித்துள்ளது. இதையடுத்து, கூகுள் மியூசிக் செயலியை, அக்டோபர் மாதத்திற்கு பிறகு வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.

ALSO READ  2070-க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும்...ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்த  மாத இறுதியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பாடல்களை வாங்கவோ, முன்பதிவு செய்யவோ, பதிவிறக்கம், பதிவேற்றம் செய்யவோ இயலாது.

மேலும்,வாடிக்கையாளர்கள் தாங்கள் இதற்கு முன் வாங்கியிருக்கும் பாடல்கள், பிளேலிஸ்ட், விருப்ப பாடல்கள் போன்ற அனைத்தையும், “யு டியூப் மியுசிக்கில்” மாற்றிக்கொள்ளலாம்.

ALSO READ  கொரோனா நிவாரண நிதியாக 7600 கோடி ரூபாய் வழங்கிய ட்விட்டர் சிஇஓ....

மேலும், கூகுள் பிளே மியூசிக் சந்தாவையும் யு டியூப்பின், ‘யு டியூப் மியூசிக் பிரீமியம்’ அல்லது ‘யு டியூப் பிரீமியத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திடீரென அதிர்ந்த தீவு… மக்கள் பீதி!

naveen santhakumar

மனித தொடர்புகளை குறைக்க ட்ரோன்களை பயன்படுத்தும் சிங்கப்பூர் அரசு….

naveen santhakumar

கனவு நகரத்தை திறந்த வட கொரிய அதிபர்

Admin