உலகம்

கனவு நகரத்தை திறந்த வட கொரிய அதிபர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வடகொரியாவில் வடக்கு மாகாணத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பல்வேறு வசதிகளுடன் கூடிய கனவு நகரத்தை திறந்துள்ளார்.வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்குப் பிரபலமானவர்.

இந்நிலையில் வட கொரியாவை வடக்கு மாகாணத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக இடத்தில் பல்வேறு வசதிகள் கொண்ட ஒரு நகரத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார். இந்தத் திட்டம் தனது ஆட்சிக்காலத்தில் கனவுத் திட்டங்களில் ஒன்றாகவும் வைத்திருந்தார்.

அதன்படி நேற்றைய தினம் இந்த கனவு நகரத்தை கிங் ஜாங் உன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஆனால் வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக இத்திட்டம் காலதாமதமாகவே நிறைவேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நகரத்திற்கு “சம்ஜியொன்” என பெயரிடப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸ் பரவல்.... தனது வலிமையைகாட்டும் வடகொரிய அதிபர் கிம்....

இந்த நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மருத்துவமனைகள் கலாச்சார மையங்கள் நட்சத்திர ஓட்டல்கள் சொகுசு விடுதிகள் என அனைத்து வசதிகளுடன் கிட்டத்தட்ட 4000 குடும்பங்கள் வசிக்கலாம். நவீன நாகரீகத்தின் அடையாளமாகத் திகழும் இந்த கனவு நகரம் குறித்து அந்நாட்டு அரசிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor

அழிவின் விளிம்பில் சிங்கராஜா

News Editor

இந்திய தம்பதி அபுதாபியில் செய்த வியக்கவைக்கும் செயல்…..

Shobika