உலகம் தொழில்நுட்பம்

மனித தொடர்புகளை குறைக்க ட்ரோன்களை பயன்படுத்தும் சிங்கப்பூர் அரசு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிங்கப்பூர்:-

சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை முதல் தூண்களைப் பயன்படுத்த சிங்கப்பூர் அரசு தொடங்கியுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக சமூக விலைகளை பின்பற்றவும் மனித தொபர்பை குறைக்கும் முயற்சியாகவும் இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சமூக விலகல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக ட்ரோன் தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் அரசு பயன்படுத்தியுள்ளது. கிழக்கு பசிபிக் கடல்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றில் இருந்தவர்களுக்குத் தேவையான இரண்டு கிலோ கிராம் வைட்டமின்களை ட்ரோன் சேவை மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன் 2 கிலோ எடையுள்ள விட்டமின்களை எடுத்துக்கொண்டு 2.7 கிலோ மீட்டர் தூரத்தை 2 நிமிடத்தில் கடந்துள்ளது.

ALSO READ  டைனோசரின் கால் தடத்தை கண்டுபிடித்த 4 வயது சிறுமி:

இது குறித்து எஃப்-ட்ரோன்ஸ் (F-Drones) தலைமை நிர்வாகி நிக்கோலா ஆங் (Nicolas Ang) கூறுகையில்:-

இது எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள வணிக நோக்கிலான முதல் ட்ரோன் ஆகும். இதன் பெயர் BVLOS (beyond visual line of sight). கொரோனா ஊரடங்கு காலத்தில் திறமையான முறையில் செயல்படவே ட்ரோன் முறையை பயன்படுத்தினோம். தொற்றுநோய்க்கு மத்தியில் தேவையற்ற மனித தொடர்புகளையும் குறைக்கக்கூடும் என்று கூறினார்.

ALSO READ  பில்கேட்ஸ் மருமகனாகும் குதிரை ஏற்ற வீரர்

கப்பலில் உள்ளவர்களின் பொருட்களை எடுத்துச்செல்லும் வகையில் ட்ரோன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு 100 கிலோ தூரத்திற்கு கப்பல்கள் மற்றும் கடல் தளங்களுக்கு வழங்கக்கூடிய ட்ரோன்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக எஃப்-ட்ரோன்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடலோரப்பகுதியில் விநியோகம் செய்ய சிறிய படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இதுபோன்ற ஆளில்லா வாகனங்களைப் பயன்படுத்துவது 80 சதவிகித செலவை மிச்சமடைவதாக எஃப்-ட்ரோன் நிருவனம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

101 வயதில் கொரோனாவை விரட்டிய நெதர்லாந்தின் Super Strong பாட்டி

naveen santhakumar

மனிதனின் தலையை வெட்டிக் குப்பைத் தொட்டியில் வீசிய நபர் கைது:

naveen santhakumar

ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த டாக்டர்

Admin