உலகம்

கொரோனா நிவாரண நிதியாக 7600 கோடி ரூபாய் வழங்கிய ட்விட்டர் சிஇஓ….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உலக நாடுகளில் பல்வேறு பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி  ஜாக் டோர்ஸி (43) ஒரு பில்லியன் டாலர் அளித்துள்ளார். இது இவரது சொத்தில் கிட்டதட்ட ⅓ பாகம் ஆகும்.

கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். தற்போது இவரது சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டாலர் ஆகும்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜாக் டோர்ஸி:-

ALSO READ  கடைசிவரை கொரோனா வைரஸ்க்கு மருந்து கிடைக்காமலே போகலாம்- WHO.. 

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக ஒரு பில்லியன் டாலர் அளிக்க உள்ளேன். இது எனது சொத்தில் 28 சதவீதம் ஆகும். இந்த வைரஸ் பிரச்சனைகள் முடிந்த பின்னர் மகளிர் கல்வி மற்றும்  ஆரோக்கியத்திற்கு உதவ உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இவரது பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கக்கூடிய தொகை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்தபட உள்ளது. டோர்ஸி தனது இளம் வயதிலேயே ட்விட்டர் வலைத்தளத்தில் தொடங்கியதன் மூலமாக மாபெரும் கோடீஸ்வரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  ரஷ்யாவில் அவசரநிலை.!!அதிகாரிகளின் அலட்சியத்தால் நதியில் கலந்த 20,000 டன் ஆயில்- கொந்தளித்த புதின்! 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor

பாதைகளை கண்டறிய பூமியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்தும் நாய்கள்!!…. 

naveen santhakumar

உலகம் முழுவதும் 10 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு !

News Editor