தமிழகம்

ஜவுளிக்கடையின் புதிய யுக்தி….ரோபோட் மூலம் வாடிக்கையாளர்கள் வரவேற்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது திறக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணிந்தால் மட்டுமே கடைக்குள் அனுமதிக்கப்படுவது, கடைக்கு செல்லும் முன்பு சானிடைசர் வைத்து கைகளை சுத்தம் செய்வது, கடைகளில் பொருட்களை வாங்கும் போது தனிமனித இடைவெளியை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கடை உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ஜவுளி கடை ஒன்று இந்த பணிகளுக்காக ஒரு பெண் ரோபோட்டை வைத்துள்ளது.அதன் பெயர் ஜஃபிரா, அந்தப் பெண் ரோபோட் கடைக்கு உள்ளே வரும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் சானிடைசர் தந்து கைகளை சுத்தம் செய்யச் சொல்கிறது.அதன்பின் அவர்கள் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா??? என்று சோதனை விடுகிறது

அதன் பின்னர் அவர்களுடைய உடல் வெப்ப நிலையையும் சோதிக்கிறது. இவை மூன்றும் நடந்த பின்னரே அந்த வாடிக்கையாளரை கடைக்குள் அந்த ரோபோட் அனுமதிக்கும். 

ALSO READ  பஸ் டிக்கெட் ரேட் கேட்டது ஒரு குத்தமா? திருச்சியில் பயணிக்கு நேர்ந்த சோகம்.

ஒரே நேரத்தில் மூன்று பேர் செய்யும் வேலையை இந்த பெண் ரோபோட் செய்வதால் கடை உரிமையாளருக்கு செலவு மிச்சம் என்பது மட்டுமின்றி அந்தப் பெண் ரோபோட்டின் அழகை பார்த்து ரசிப்பதற்கும் அது செய்யும் வேலையை பார்ப்பதற்கும் பல வாடிக்கையாளர்கள் விரும்பி இந்த கடைக்கு வருகின்றனர்

அந்த பெண் ரோபோட் மிகவும் அன்புடன் மனிதர்களைப் போலவே நடந்து கொள்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புது டெல்லியிலும் ஓடிய அமைச்சர்…

News Editor

தொடர் ATM கொள்ளைகளில் கைவரிசை காட்டியவர்களில் மேலும் ஒரு கொள்ளையன் கைது :

Shobika

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

naveen santhakumar