தமிழகம்

மாணவர்களின் சேர்க்கை விபரத்தை சமர்பிக்க கோரி…… பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2019-2020 மற்றும் 2020 -2021-ம் கல்வியாண்டின் பள்ளி மாணவர் சேர்க்கை விவரத்தை, வருகின்ற 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்,அவர்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில்,

“பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகையான உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2019 -2020-ம் கல்வியாண்டில், LKG முதல் 12-ம் வகுப்பு வரையில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கையையும், 2020-2021 ஆம் கல்வியாண்டில் வருகிற 30-ஆம் தேதி வரை, LKG முதல் 12-ம் வகுப்பு வரையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் மொத்த எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ALSO READ  கொரோனாவுக்கு எதிரான போருக்கு தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை ...

இந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை தகவல்களை அடுத்த மாதம் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின்  மின்னஞ்சல்(e-mail) முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அந்த சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரண்டு நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

naveen santhakumar

காவல்துறை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

News Editor

மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று;ஆரம்ப சுகாதார நிலையம் மூடல் !

News Editor