உலகம்

எல்லை தாண்டிய அதிகாரியின் உடலை எரித்த வடகொரியா:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சியோல்:

தங்களது நாட்டு அதிகாரி ஒருவர், எல்லையினை தாண்டியதாக கூறி வட கொரிய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு துறை  அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், தென் கொரிய கடலோர பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், கடந்த 21-ம் தேதியன்று யென்பியாங் தீவின் தென் பகுதியில் நீர்பரப்பில் 1.9km தூரத்தில் மாயமானார். 

ALSO READ  வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று; கிம் அதிரடி உத்தரவு... 

அவரது உடல், வடகொரிய கடல் பக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்த வட கொரிய வீரர்கள், அவரை சுட்டு பின்னர், உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்.இது தற்போது  உளவுத்துறையின் விசாரணை மூலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

“வட கொரியாவின் இதுபோன்ற அட்டூழியத்தை எங்கள் இராணுவம் கடுமையாக கண்டிக்கிறது, மேலும் விளக்கங்களை வழங்கவும், பொறுப்புள்ளவர்களை தண்டிக்கவும் கடுமையாகக் கோரிக்கை விடுக்கிறது” என்று கூட்டுத் தலைவர்களின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜெனரல் அஹ்ன் யங்-ஹோ கூறினார்.இது ஒரு மிருகத்தனம் வாய்ந்த செயல் என்று   அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலக அறிவுசார் சொத்துரிமை தினம்…

naveen santhakumar

கேக் சாப்பிட்ட ஆஸ்திரேலிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

Admin

மியான்மர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி ராணுவத்தினரால் சிறைபிடிப்பு:

naveen santhakumar