விளையாட்டு

பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸி. பந்துவீச்சில் திணறிய நியூசிலாந்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 148 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர்(41 ரன்கள்), லபுசாக்னே(63 ரன்கள்), ஸ்டீவ் ஸ்மித் (85 ரன்கள்), ட்ராஸ் ஹெட்(114 ரன்கள்), டிம் பெய்ன் (79 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 467 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் டாம் லதாம் மட்டுமே தனியாளாக போராடி 50 ரன்கள் எடுத்தார். இறுதியாக தனது முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ALSO READ  ‘தல தோனி’தான் கிரேட்… சொன்னது யார் தெரியுமா?

ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், பேட்டின்சன் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 319 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மே.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: புவனேஸ்வர் குமார் விலகல்

Admin

கோப்பை யாருக்கு: 3வது டி20யில் இன்று இந்தியா- மே.தீ. மோதல்

Admin

“எதிர்பார்ப்புக்கும் நடைமுறைக்கும் இடையிலான வாழ்க்கை”- 10 திருமண நாள் குறித்து சானியா மிர்சா…

naveen santhakumar