விளையாட்டு

மத பாகுபாடு காட்டிய பாகிஸ்தான் வீரர்கள்: கம்பீர் கடும் கோபம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா மீது மத பாகுபாடு காட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2000 ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சுழல் பந்து வீச்சாளராக விளையாடுவர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிகள் 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது அபார பந்துவீச்சால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் என்றது. ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தொடர்ந்து விளையாட தடை விதிக்கப்பட்டார். பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இந்து மதத்தைச் சேர்ந்த 2வது வீரர் டேனிஷ் கனேரியா ஆவார்.

ALSO READ  டோக்கியோவில் நாளை தொடக்கம் ! பாராலிம்பிக் போட்டிகள்!

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில், டேனிஷ் கனேரியா அணியில் வழங்கியபோது சக வீரர்களால் மத பாகுபாடு காட்டப்பட்டார் என்றும், அவர் கொண்டு வரும் உணவை இந்து என்கிற காரணத்தால் உன்ன மறுத்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். ஆனால் அந்த இந்து வீரரால் தான் பாகிஸ்தான் அணி வரலாற்று வெற்றிகளை பெற்றது. ஆனால் அதற்குரிய பாராட்டு டேனிஷ் கனேரியாவுக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார்.

இதுகுறித்து டேனிஷ் கனேரியா, தன்னால் சொல்ல முடியாத சம்பவங்களை சோயப் அக்தர் வெளியிட்டதற்கு நன்றி எனவும், தான் தற்போது நல்ல நிலைமையில் இல்லை அதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ALSO READ  ஜூனியர் உலக கோப்பையை வெல்லுமா இந்தியா?

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் டேனிஷ் கனேரியா பாகுபாடு காட்டப்பட்டது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான காம்பீர் கோபமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இதுதான் பாகிஸ்தான் அணியின் உண்மையான முகம். ஒரு கிரிக்கெட் வீரர் பிரதமராக இருக்கும்போது அணியில் இப்படி பாகுபாடு காட்டப் படுகிறது என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் இந்த சம்பவம் உண்மையிலேயே வெட்கக்கேடானது என கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக வீரரை ஆட்டத்தில் சேர்க்காதது குறித்து தோனி விளக்கம்:

naveen santhakumar

ஐபிஎல் ஏலம் இன்று ஆரம்பம்- வீரர்கள் இடையே கடும் போட்டி

Admin

Ind Vs SL – இரண்டாவது ஒருநாள் போட்டி; இலங்கை அணி முதலில் பேட்டிங்

naveen santhakumar