இந்தியா

கொரோனா மையங்களாக மாறிய கல்லாரிகளை……மீண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்காக தனியார் கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. இந்த மையங்களில் 16 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டன. லேசான அறிகுறி மற்றும் தீவிர சிகிச்சை தேவையில்லாத கொரோனா நோயாளிகள் 2 வாரம் வரை இந்த மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு 3 வேளையும் உணவு, மருந்துகள் மற்றும் போர்வை, குளியல் சோப்பு, பக்கெட், பற்பசை உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன. இதற்காக மிகப்பெரிய தொகையை மாநகராட்சி செலவிட்டு வருகிறது. சராசரியாக தினசரி ஒவ்வொருவருக்கும் ரூ. 500 செலவு செய்ததாக கூறப்படுகிறது.

ALSO READ  முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் - அதிகாரபூர்வமாக அறிவித்தது இந்திய விமானப்படை

இப்போது அந்த சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுவிட்டன. அங்கு போடப்பட்டிருந்த படுக்கைகள் ஜெ.ஜெ.நகர் உள் விளையாட்டு அரங்கத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.நடமாடும் கழிவறைகளும் அகற்றப்பட்டுவிட்டன.

சிகிச்சை மையங்கள் செயல்பட்ட அனைத்து கல்லூரிகளையும், கல்லூரி உரிமையாளர்களிடம் விரைவில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். ஒப்படைப்பதற்கு முன்பு கல்லூரிகள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எலக்ட்ரிக் பைக் டாக்ஸி – தமிழ் நாட்டுக்கு எப்போது வரும் ?

News Editor

ஆம்பளைங்க மட்டும் தான் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுவீங்களா????பெண்களும் ஆம்பளைங்கள வீடியோ எடுத்து மிரட்டுவோம்:

naveen santhakumar

தொடரும் போராட்டம்; மத்திய அரசின் கோரிக்கைகளை நிராகரித்த விவசாயிகள்..!

News Editor