தமிழகம்

அட!!!!!!….நம்ம ஜூலியா இப்படி பேசுறது……..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஜூலி பங்கு பெற்று பொய் சொல்லி சிக்கியதால், 3 வருடத்திற்கும் மேலாக இவர் எது செய்தாலும் அதனை நெட்டிசன்கள் சிலர், தொடர்ந்து விமர்சித்து வந்தனர். 

இந்நிலையில் இவர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 19 வயது பெண்ணின் இறப்பிற்கு நியாயம் கேட்கும் விதத்திலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த முயற்சியை பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.

முகத்தில், ரத்த காயங்கள் உள்ளது போல் மேக்அப் போட்டுக்கொண்டு இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த மாதிரி மேக்அப் போட்டு உள்ளதால் என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள்.நான் பேச உள்ளது பலபெண்கள் சந்தித்து வரும் ஒரு பிரச்னையை குறித்து என தன்னுடைய ஆவேசமான பேச்சை துவங்குகிறார்.

ALSO READ  மூன்று தலையுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி….!!!!!

கொரோனா மற்றவர்களுக்கு வந்தால் நாம் பயப்படுவது இல்லை, அதனை கண்டுகொள்வது இல்லை, அதுவே நமக்கும், நம்முடைய குழந்தைகளுக்கும் வந்தால் மட்டும் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்கிறோம் என்றும், அதேபோல் பாலியல் பலாத்கார விஷயத்திலும் வேறு ஏதோ ஒரு பெண்ணுக்கு நேர்ந்தது என நாம் கவனிக்காமல் இருந்து விட கூடாது. முதல் நாள் அன்று வைரலாக பேசப்படும் அந்த விஷயம் 3 நாட்களில் மறந்து போய் விடும் நிலையில் தான் உள்ளது.

2019 ஆம் ஆண்டில் மட்டும் 32 ஆயிரத்து 33 பேர் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதில் நான்கு மாத குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இருப்பதாகவும் ஜூலி அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமைகளுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பிறப்பில் சாதி பார்க்கும் பலர், பிறப்பு உறுப்பில் மட்டும் ஜாதி பார்ப்பதில்லை என சாட்டையடி கேள்விகளை தன்னுடைய வீடியோவில் கேட்டு விளாசியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள்- விஜயகாந்த்… 

naveen santhakumar

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்..!

Admin

செப். 13 முதல் 21-ம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

News Editor