இந்தியா

பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த அமைச்சர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீகார்:

ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பீகாரின் கல்வியமைச்சர் மேவாலால் சௌத்ரி.

நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, 7வது முறையாக பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.

ALSO READ  புதுச்சேரிக்கு கண்டிப்பாக மாநில அந்தஸ்து வேண்டும்; முதலமைச்சர் நாராயணசாமி

இதனிடையே நிதிஷ்குமாரின் அமைச்சரவையில் உள்ள சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டினை சாடினர். இதன் காரணமாக இரு கட்சியினரிடையேயும் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் பீகாரின் கல்வியமைச்சராக இருந்த மேவாலால் சௌத்ரி தாமாக முன்வந்து முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார். பதவியேற்ற மூன்றே நாட்களில் அவர் ராஜினாமா செய்திருப்பது பீகார் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பைக்கில் ‛ட்ரிபிள்ஸ்’ போக அனுமதி’ -பாஜக தலைவர்…!

naveen santhakumar

மும்பை போவாயில் ஆட்டோமொபைல் ஷோரூமில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.

naveen santhakumar

மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்பதால் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை..!

News Editor