இந்தியா

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் மிகப்பெரிய பேரணி நடத்தி, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர். 

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்றனர்.ஆனால் இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லி நோக்கிச் செல்லும் அனைத்து பாதைகளையும், ஹரியானா மாநிலத்திற்குள் நுழையும் அனைத்துப் பாதைகளையும் போலீசார் அடைத்தனர். பொதுமக்களின் வாகனங்கள் மட்டும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டன. 

ALSO READ  பெகாசஸ் விவகாரம், அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை- மத்திய அமைச்சர் விளக்கம்

எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆளில்லா விமானம் மூலமாகவும் போராட்டக்காரர்களை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.தடையை மீறி பேரணியாக செல்ல முயற்சிக்கும் விவசாயிகளை போலீசார் விரட்டியடித்தனர். ஆனால், விவசாயிகள் எல்லையிலேயே முகாமிட்டு தொடர்ந்து டெல்லி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். எல்லையில் போராட்டம் நடத்துவதால் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், இன்று காலையிலும் சிங்கு எல்லையில் விவசாயிகள் முன்னேறிச் செல்ல முயன்றனர். தங்களை டெல்லி செல்ல அனுமதிக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி டெல்லி செல்லவும் முயற்சித்தனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதனால் விவசாயிகள் நிலைகுலைந்து போயினர். ஆனாலும் அந்த பகுதியை விட்டு அகலாமல் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹிந்தி, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையால் சர்ச்சை- பின்வாங்கியது ஜிப்மர்…! 

naveen santhakumar

நீதிபதிகளின் குடும்பத்திற்காக கொரோனா சிகிச்சை மையமாக மாறிய 5 ஸ்டார் ஹோட்டல் !

News Editor

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு…

naveen santhakumar