சினிமா

எடையை 10 கிலோ வரை குறைத்து ஸ்மார்ட்-ஆக மாறியுள்ள பஹத்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளா :

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பஹத் பாசில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நேரத்தில், மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலம் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தவர் இயக்குனர் திலீஷ் போத்தன். 

அதனைத்தொடர்ந்து “தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்” என்கிற படத்தில் இணைந்து மீண்டும் வெற்றி பெற்ற இந்தக் கூட்டணி,சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ‘ஜோஜி’ என்கிற படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

ALSO READ  மலையாள ரீமேக்கில் நடிக்கும் பிரியா பவானி சங்கர் மற்றும் அசோக் செல்வன்.... 

இவர்களது இரண்டு படங்களின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் தான் இந்த படத்துக்கும் கதை எழுதியுள்ளார். கொரோனா தாக்கத்திற்கு முன்பாக, பஹத் பாசில் தான் நடித்த ‘மாலிக்’ என்கிற படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து இருந்தார். இந்தநிலையில் தற்போது இந்த படத்திற்காக இன்னும் கூடுதலாக பத்து கிலோ உடல் எடையை குறைத்து ரொம்பவே ஸ்லிம் & ஸ்மார்ட் ஆக மாறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ரைசா வில்சன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு  !

News Editor

சமந்தா படைத்த சாதனை …நாட்டில் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத அங்கிகாரம்..! 

News Editor

நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம் ..!

naveen santhakumar