அரசியல்

தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பாக அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சியில் இன்று அதிமுகவின் கழக நிகழ்ச்சி  நடைபெற்றது. இதற்கு  அதிமுகவின் திருச்சி  புறநகர் மாவட்ட கழக செயலாளர் பா. குமார் தலைமை ஏற்று இருந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு  மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி அவர்கள்  பங்கேற்பதற்க்காக திருச்சிக்கு வருகை தந்திருந்தார். அப்பொழுது தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பாக கோரிக்கை மனு அமைச்சர் தங்கமணியிடம் கொடுக்க பட்டது .

அதில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விழாவாக நடத்திடவும் , ஜல்லிக்கட்டு மாடுகளுக்கும் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கும் உயிரிழப்பு ஏற்பட்டால் அரசு  சார்பில் நிதி  வழங்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை செய்ய வேண்டும், என்ற மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலசங்கத்தின்   மாநில  தலைவர் ஒண்டிராஜ் ,மாவட்ட தலைவர் ஓலையூர்மூக்கன்,நாவல்பட்டு மோகன் சூரியூர் ராஜா போன்றோர்கள் அமைச்சரிடம் கொடுத்தனர்.

ALSO READ  அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்...

அப்போது சில ஜல்லிக்கட்டு காளைகளும் அதன் நிர்வாகிகளும் உடன் இருந்தனர் .

இந்நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போட்டியில்  யாராலும் அடக்க முடியாத காளையாக வெற்றி பெற்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிடம்  கார் பரிசாக பெற்ற இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளையும் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற போவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

naveen santhakumar

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவு !

News Editor

அண்ணாமலைக்கு போட்டியாக களம் இறங்குகிறாரா??? சசிகாந்த்:

naveen santhakumar