சினிமா

அண்ணாத்த பட  லுக்கில் ஸ்டைலாக தோன்றும்  ரஜினி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு  இந்தவருட தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, வருட இறுதியில் அனைத்து பணிகளும் முடிந்து அடுத்த ஆண்டு  பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு  அறிவித்து இருந்தது.

ALSO READ  அதீரா எப்படி உயிர் பிழைதான்? 'கே.ஜி.எப் 2'படத்தின் கதையை வெளியிட்ட படக்குழு...! 

அதனால்  அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஆனால், கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

ALSO READ  அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டா முதல்வர் !

இந்நிலையில் ரஜினி படப்பிடிப்பு தளத்தில் அண்ணாத்த லுக்கில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் உடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் அமர்ந்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் ட்ரெண்டியாகி வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சபாக் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

Admin

உலகநாயகன் நடிக்கும் வித்தியாசமான பெயர் கொண்ட படம்…..பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் வெளியீடு…..

naveen santhakumar

உண்மையிலேயே நீ ‘தங்கமே’ தான்! புடவையில் கலக்கும் நயன்தாராவின் அசத்தல் புகைப்படங்கள்

Admin