உலகம்

அதிகரிக்கும் கொரோனா  மலேசியாவில் அவசரநிலை பிரகடனம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள்.

இந்நிலையில் தற்போது பிரிட்டனில் உருமாறிய கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் அங்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா காரணமாக மலேசியாவிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மலேஷியாவில் 3 மாதங்களுக்கு முன் 15 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தல் காரணமாக 1 லட்சத்து 38 ஆயிரமாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது தவிர நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ  கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் அமெரிக்க போர்கப்பல்... 

இதுபோன்ற காரணங்களால் பிரதமர் முஹிதின் விடுத்த கோரிக்கையை ஏற்று மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அவசர நிலையை பிரகடனம் செய்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டைனோசரின் கால் தடத்தை கண்டுபிடித்த 4 வயது சிறுமி:

naveen santhakumar

பரிதாப நிலையில் சிங்கங்கள் : சூடானின் அவலநிலை

Admin

ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் முடிவு:ஈரான்!

Admin