உலகம்

ஐஷ்கிரீமில் கொரோனா….அதிர்ச்சியில் சீனா..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரானோ வைரஸ் இன்று வரை உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.பல லட்சம் பேரின் உயிரைப் பறித்த கொரோனா, பல கோடி மக்களின் வாழ்வையும் புரட்டிப் போட்டுவிட்டது. 

இந்நிலையில் தற்போது ஐஸ்க்ரீமில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. கிழக்கு சீனாவின் தியான்ஜின் நகரில் இருக்கும் ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் ஐஸ்க்ரீம்களின் மாதிரிகளில் சோதனை செய்யப்பட்டபோது, அதில் கரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து, மாதிரிகள் எடுக்கப்பட்ட ஐஸ்க்ரீம் அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஏற்கனவே விற்கப்பட்ட ஐஸ்க்ரீம்களும், அதனை சாப்பிட்டவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இதுவரை யாருக்கும் ஐஸ்க்ரீம்களால் கரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. மேலும் ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குக் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

ALSO READ  சிரிச்சா அலுவலகத்துக்குள் செல்ல முடியம்

இந்த ஐஸ்க்ரீம்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து வருவதால், அந்த மூலப்பொருட்கள் மூலமாக ஐஸ்க்ரீம்களில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சீனா கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா எப்போதும் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது:

naveen santhakumar

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. தீவிர முயற்சி

News Editor

UAE-ல் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்….

naveen santhakumar