உலகம்

அதிர்ச்சி…!!!!!! அதிபர் ஜோ பைடன் பதவியேற்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன், கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 6-ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்குள் கலவரத்தில் ஈடுபட்டதால், பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. தலைநகரில் 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பைடன் பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட வீரர்களில் சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது, பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

ALSO READ  மாஸ்டர் சிவசங்கரின் கவலைக்கிடம் - உதவி கேட்டு தவிக்கும் குடும்பம் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்

அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 4.10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரு தினங்களாக பலி எண்ணிக்கை 4000 என்ற அளவில் உள்ளது.அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ்..!

naveen santhakumar

வானில் தெரிந்த விசித்திர பொருளால் பாகிஸ்தானில் பரபரப்பு:

naveen santhakumar

பருவநிலை மாறுபாடால் தண்ணீர் தொடர்பான பேரிடர்களான பெருவெள்ளம், பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் : ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

News Editor