சினிமா

மாஸ்டர் சிவசங்கரின் கவலைக்கிடம் – உதவி கேட்டு தவிக்கும் குடும்பம் – உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல நடன இயக்குனர் மற்றும் நடிகர் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவசங்கர் மாஸ்டர், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.

Sivasankar Master in life threatening condition Intensive t

பூவே உனக்காக , விஷ்வதுளசி, வரலாறு , உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், 2003 ஆம் ஆண்டில், திருடா திருடி படத்தின் புகழ்பெற்ற பாடலான மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் மேலும் அதிகமானது.

ALSO READ  காஷ்மீர் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி !

நடன இயக்குநர் மட்டுமின்றி சிவசங்கர், கே. எஸ். ரவிக்குமாரின் வரலாறு , பாலாவின் பரதேசி ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

ఎందుకలా తిప్పుకోవడం.. మీకు ఆడతనం వచ్చేసిందా?: క్లారిటీ ఇచ్చిన శివ శంకర్  మాస్టర్ | shiva shankar master clarification on his female expressions -  Telugu Filmibeat

இந்நிலையில் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

ALSO READ  சட்டப்பேரவையில் தன் பலத்தை கூட்டியது பாஜக !

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டர் பற்றி தகவல் அறிந்த நடிகர் சோனு சூத் அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.

சோனுவின் ட்வீட்டை கண்ட மக்கள், யார் உதவி கேட்டாலும் செய்கிறார். யாராவது கஷ்டப்படுவது குறித்து அறிந்தாலே தாமாக முன்வந்து உதவுகிறார். அவர் நல்லா இருக்கணும் என்று வாழ்த்தியுள்ளனர்.

இதனிடையே சிவசங்கர் மாஸ்டருக்கு உதவி செய்ய விரும்புவோர் அவரின் மகன் அஜய் கிருஷ்ணாவை 9840323415 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வனிதாவின்….. மூன்றாவது திருமண வாழ்க்கையும்….. கோவிந்தாவா??????

naveen santhakumar

மீண்டும் தொடங்கும் “அண்ணாத்த” படத்தின் ஷூட்டிங்..!

News Editor

இந்திய ராணுவத்தின் புதிய Tour Of Duty திட்டத்திற்கு பிரணிதா பாராட்டு…

naveen santhakumar