சினிமா

“தி கிரேட் இந்தியன் கிட்சன்”தமிழ் ரிமேக் பூஜையுடன் துவக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் தயாராகிய படம்  “தி கிரேட் இந்தியன் கிட்சன்”. இந்த படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி  ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

பெண்களின் சுய வாழ்வியலை அழிக்கும் ஆணாதிக்க வர்க்கத்தின் முகத்தை கலப்படம் இல்லாமல் தோலுரித்து காட்டியுள்ளது “தி கிரேட் இந்தியன் கிட்சன்” திரைப்படம். அதனால்  ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் மத்தியில் வரவேற்புகளையும் பாராட்டுகளையும் பெற்றது.

இந்த படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, பிறமொழியிலும் ரிமேக் செய்ய பலர் முயற்சித்தனர். அந்தவகையில் இயக்குனர் கண்ணன் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கவுள்ளார்.  நிமிஷா, சுஜயன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ALSO READ  சுல்தான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு !

இறுதியில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இவரே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

#thegreatindiakitchan #tamilthisai #tamilnadu #malayalamovie #tamilcinema #aishwarayarajesh


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜார்ஜியா படப்பிடிப்பில் விஜய்; இணையத்தை கலக்கும் புதிய புகைப்படம் !

News Editor

மணிரத்னம் படத்தின் டீஸரை வெளியிடும் தனுஷ்

Admin

வெளியாகியது நடிகர் சந்தானம் படத்தின் டிரைலர்!

News Editor