சினிமா

ரிலீஸில் தள்ளிப்போன சிவகார்த்திகேயன் படம்; அதிருப்தியில் ரசிகர்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்று நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா ரூல் மோகன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில், எதிர்வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Share
ALSO READ  நேச்சுரல் நடிகர் மோகன்லாலுக்கு 60வது பிறந்தநாள்.. 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செல்வராகவன் சொல்லும் அட்வைஸ்!

naveen santhakumar

“விஜய்” படத்தால் பாதிக்கும் சிலம்பரசன்…!

News Editor

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தேசிய கொடியுடன் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்

naveen santhakumar