சினிமா

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தேசிய கொடியுடன் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் வாகா எல்லையில் நடிகர் அஜித் தேசிய கொடியுடன் தோன்றிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி இருக்கிறது. எச்.வினோத் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார், வரும் பொங்கல் தினத்தையொட்டு அடுத்த ஆண்டு வலிமை (Valimai) திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ALSO READ  திரையில் நேரடியாக மோதும் 'தல தளபதி' படங்கள்..!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்ற போதும் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் அஜித் பைக் பயணமா மேற்கொண்டார். தற்போது டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு நடிகர் அஜித் தனது பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ALSO READ  உதயநிதி ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருப்பேன்; வெங்கட் பிரபு அறிக்கை !
 நடிகர் அஜித்தோடு உரையாடியதோடு ராணுவ வீரர்கள் அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

மேலும் அங்கு எல்லையில் ராணுவ வீரர்களுடன் உற்சாகமுடன் நடிகர் அஜித் உரையாடியுள்ளார்.

 பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு நடிகர் அஜித் தனது பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பின்னர் தேசிய கொடியுடன் வாகா எல்லையில் புகைப்படம் ஒன்றை நடிகர் அஜித் எடுத்துக்கொண்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் அஜித் உற்சாகமுடன் உரையாடினார்

முன்னதாக, உலகம் முழுக்க மோட்டார் பைக்கில் தனியாக சுற்றுப்பயணம் செய்த சாகசப் பெண்ணான மரல் யாசர்லூவை நடிகர் அஜித் டெல்லியில் சந்தித்து ஆலோசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 உலகம் முழுக்க மோட்டார் பைக்கில் தனியாக சுற்றுப்பயணம் செய்த சாகசப் பெண்ணான மரல் யாசர்லூவை நடிகர் அஜித் டெல்லியில் சந்தித்து ஆலோசித்துள்ளார்.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தி கிரேட் இந்தியன் கிட்சன்”தமிழ் ரிமேக் பூஜையுடன் துவக்கம் !

News Editor

“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது”

Shanthi

17 விருதுகளை வாரி குவித்த ‘ஒற்றைப் பனைமரம்’ OTTயில்….!!!!

Shobika