விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் அன்று வெளியானது. கொரோனா அச்சத்தால் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவார்களா என சந்தேகத்தில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தயாரிக்கவுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, படத்திற்கான நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.
படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பை ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடை பெற்றுவருவதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது விஜய் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
#thalapathy #vijay #master #tamilmovie #thalapathy65 #nelson #sunpictures #poojahegde #vjay #cinema #cinemtrending #kollywood #cine #cineupdate #TamilThisai