இந்தியா சுற்றுலா

மீண்டும் வருகிறது “golden chariot” ரயில்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மீண்டும் வருகிறது “golden chariot” ரயில்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

இந்தியாவில் ஆடம்பர வசதி கொண்ட ரயிலாக அறியப்படும் golden chariot ரயிலை மீண்டும் இயக்க கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு கழகம், ஐ.ஆர்.சி.டி.சி உடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கர்நாடக அரசு மற்றும் இந்திய ரயில்வே துறையால் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட golden chariot ரயில், சகல வசதிகளோடு 44 விருந்தினர் அறைகள் கொண்ட 18 பெட்டிகள் இருக்கும். குறைந்தபட்சம், 84 பயணிகள் ஒரே நேரத்தில் ரயில் பயணத்தை அனுபவிக்க முடியும். இந்த ரயில் தான் தென்னிந்தியாவின் சொகுசு ரயிலாக கொண்டாடப்பட்டது. ஆனால் அதிக வருவாய் இழப்புகள் காரணமாக அதன் சேவைகளை தற்காலிகமாக கர்நாடக அரசு நிறுத்தி வைத்தது.

ALSO READ  உலக பெரும் பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம் !

இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் golden chariot ரயிலை கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் பிற தென் மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் வழியாக இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2010ம் ஆண்டு முதல், ஐ.ஆர்.சி.டி.சி இந்தியாவின் அதி-ஆடம்பரமான மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில், ராஜஸ்தானில் பேலஸ் ஆன் வீல்ஸ் சொகுசு ரயில், மகாராஷ்டிராவில் டெக்கான் ராணி சொகுசு ரயில் ஆகியவை உள்ளது. இதற்கிடையில் தென்னிந்தியாவை பெருமைப்படுத்த வரும் golden chariot ரயிலால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet-AZ90 giriş və qeydiyyat online casino ilə rəsmi sa

Shobika

மைதானத்தில் அம்பானி, அதானி பெயர் ; சர்ச்சையை கிளப்பிய டெஸ்ட் போட்டி..!

News Editor

கொரோனா பரவல் விவசாயிகளுக்கு மற்றொரு சிக்கல்… படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்.. 

naveen santhakumar