இந்தியா உலகம்

கொரோனா பரவல் விவசாயிகளுக்கு மற்றொரு சிக்கல்… படையெடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகமே கொரோன அச்சுறுத்தலில் இருக்கும்போது சில ஆப்பிரிக்க நாட்டு மக்கள் முப்புறமும் இயற்கையான தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில மாதங்களாக லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் உணவு தானியங்களை அழித்ததால் பெரும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத இழப்பு ஏற்படும் என்றும், வரும் காலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ள நிலையில், சில நாடுகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை பெருவெள்ளத்தால் பேரிழப்பைச் சந்தித்துள்ளன. மற்றொரு புறம் கொரோனா பரவல் காரணமாக உலகில் 5ல் ஒரு பங்கு மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

ALSO READ  பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்வு :

இதே போல இந்தியாவிலும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பலத்த அழிவை ஏற்படுத்தி வருகிறது. முன்னர் பாகிஸ்தானில்  பலத்த சேதத்தை ஏற்படுத்திய இவை தற்போது ராஜஸ்தானின் பல பகுதிகளில் அழிவை ஏற்படுத்தி பயிர்கள் மற்றும் மரங்களை அழித்த பின்னர், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங்கின் தொகுதியான செஹூரில் புத்னியில் நுழைந்துள்ளது. இது அம்மாநிலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவு இது தற்போது பெரிய சவாலாக முன்னெழுந்துள்ளது. 

ம.பி. மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தின் வழியாக நுழைந்த வெட்டுக்கிளி பூச்சிகள், பின்னர் மால்வா நிமரின் சில பகுதிகளுக்குச் சென்று இப்போது போபாலுக்கு அருகில் உள்ளன. 

ALSO READ  பிரதமர் தலைமையில் தொடங்கியது 6 வது நிதி ஆயோக் கூட்டம்  !

இந்த பாலைவன வெட்டுக்கிளியின் படையெடுப்பானது மழைக்காலம் வரை தொடரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லி கலவரத்தின்போது பொதுமக்கள் கலவர கும்பலிடம் இருந்து காப்பாற்றிய ‘ஹீரோ போலீஸ்’.

naveen santhakumar

R.L கண்ணன் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிய மருத்துவர் சங்கர்

News Editor

கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :

Shobika