உலகம்

பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது.மேலும் பலத்த புயல் காற்றும் வீசியது.இந்த கனமழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.‌

இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையினால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒகாரா நகரில் உள்ள தாரிக் அபாத் என்ற பகுதியில் கனமழையின் போது ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

ALSO READ  பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கிடைத்த எதிர்பாராத பாராட்டு....

இதில் அந்த வீட்டில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் இறங்கினர். எனினும் 3 பெண்கள், நான்கு சிறுவர்கள் உள்பட 8 பேரை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் ஒகாரா மாவட்டத்தின் ஹஜ்ரா ஷா முகீம் என்ற பகுதியில் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த சுவர் ஒன்று கனமழையால் இடிந்து விழுந்தது. சுவரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். டோபா தேக் சிங் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் உலக நாடுகள் !

News Editor

‘சீன வைரஸ்’ என்று அழைக்க வேண்டாம்… இந்தியாவிடம் சீனா வேண்டுகோள்…

naveen santhakumar

உள்ளங்கை அளவு பிறந்த குழந்தையின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா?

Admin