அரசியல்

மத்திய அரசின் ஆட்சி மொழி தமிழ்- ஸ்டாலின் உறுதி…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி, அலுவல் மொழியாகிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கருணாநிதியின் முயற்சியால், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கான அரசாணை கடந்த 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

பரிதிமாற்கலைஞரில் தொடங்கி பல தமிழறிஞர்களும் 100 ஆண்டுகாலமாக வலியுறுத்திய செம்மொழித் தகுதி, தலைவர் கருணாநிதியின் பெருமுயற்சியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

ALSO READ  விரைவில் முற்றுப்புள்ளி...பொங்கல் திருநாளில் உறுதியேற்ற ஸ்டாலின்!

செம்மொழி தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி அலுவல் மொழியாக்கிட உறுதியுடன் பாடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்-டி.டி.வி தினகரன் 

News Editor

கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆசிரியத்தை ஏற்படுத்தவில்லை; சைதை துரைசாமி !

News Editor

மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு !

News Editor